ஜனவரி மாதமளவில் 140 மில்லியன் அமெரிக்க டொலரே இலங்கையிடம் இருக்கும் எனவும் நாட்டின் பொருளாதாரத்தை எங்கு கொண்டு செல்லப் போகிறது நடைமுறை அரசு எனவும் கேள்வியெழுப்பியுள்ளார் சமகி ஜன பல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா.
இவ்வருட இறுதியில் சிறு கடன்களை செலுத்திய பின்னர் ஜனவரியில் 140 மில்லியன் டொலரே எஞ்சியிருக்கும் எனவும் அதன் பின் பெப்ரவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 4843 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் நாட்டின் பொருளாதாரம் இந்தளவு வீழ்ச்சியைக் கண்டதில்லையெனவும் இதனை அரசு எதிர்கொள்ள முறையான திட்டங்களில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர் நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment