சீன நிறுவனத்துடனான முறுகல் மேலும் விரிசலடைந்துள்ள நிலையில் குறித்த நிறுவனத்துக்கு 6.7 மில்லியன் டொலர் செலுத்தி சமரசத்துக்குச் செல்வதாக விளக்கமளித்துள்ளார் விவசாய அமைச்சர்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பசளையை மீண்டும் 'தரமாக' தயாரித்து அனுப்ப சீன நிறுவனத்திடம் கேட்டுக் கொள்வதோடு குறித்த நிறுவனத்தின் 5 மில்லியன் டொலர் வைப்பு உட்பட 6.7 மில்லியன் டொலர் செலுத்தப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை - சீன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பாரிய கடன் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் அரசாங்கம் மேலும் கடன் பெற வழி தேடிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment