கடந்த 'நல்லாட்சி' யினருக்கும் இப்போதுள்ள அரசுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லையென்கிறார் அபே ஜன பல கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துராலியே ரதன தேரர்.
நல்லாட்சியினரும் நாலு சுவருக்குள்ளேயே அமைச்சு பதவிகளை பகிர்ந்து - பாதுகாத்ததாகவும் அதே போன்றே இந்த ஆட்சியிலும் அமைச்சுப் பதவிகள் மேலிடத்தால் தீர்மானிக்கப்படுவதாகவும் ரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆறு மாதத்துக்குள் இராஜினாமா செய்வதாக பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரதன தேரரு அபகரித்து வைத்திருப்பதாக அவரது கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment