வெளிநாட்டு நிதியுதவியில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் ஒன்றின் முடிவில் எஞ்சியிருந்த 96 மில்லியன் ரூபா மாயமாகியுள்ள நிலையில் அது தொடர்பில் முழு விசாரணையை நடாத்த கோரியுள்ளார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
காணாமல் போன பணம், பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவிததுள்ள போதிலும் அவ்வாறு எவ்வித பிரச்சார நடவடிக்கைகளும் இடம்பெறவில்லையென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் மாயமாகியுள்ள பணம் தொடர்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவிக்கின்றார்.
No comments:
Post a Comment