இவ்வருடம் நாட்டின் பல பாகங்களில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பு சம்பவங்களின் பின்னணியில் இதுவரை 7 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 19 பேர் காயங்களுக்குள்ளானதாகவும் மொத்தமாக 847 சம்பவங்கள் இடம்பற்றுள்ளதோடு அதில் 797 லிட்ரோ சிலிண்டர்களுடன் தொடர்பு பட்டவை எனவும் 50 நிறுவன சிலிண்டர்களுடன் தொடர்பு பட்டவை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனினும், நவம்பரில் 2.8 மில்லியன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 0.02 வீதமே இவ்வாறு வெடிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் டி.ஐ.ஜி தேசபந்து தென்னகோனின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment