நாட்டில் அண்மையில் 458 சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அரசாங்கம் மூடி மறைப்பதாகவும் தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
நுகர்வோர் அதிகார சபையும் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் சபையாக மாறியுள்ளதாகவும் உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இருப்பினும், இவையெல்லாம் 'சாதாரண' சம்பவங்கள் என்றே அரசாங்கம் தொடர்ந்தும் சமாளித்து வருவதாகவும் நேற்றைய தினம் அம்பலந்தொட்டயில் வைத்து அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment