அண்மையில் பிரத்யேக விமானமொன்றை வாடகைக்கு அமர்த்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ச திருப்பதி சென்று வந்ததன் செலவு 32 மில்லியன் ரூபா என தெரிவிக்கிறது ஜே.வி.பி.
நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் வீழ்ந்து, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதுடன் டொலர் பற்றாக்குறையினால் துறைமுகம் வரை வந்துள்ள பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத சூழலில் நாடு இருக்க, பிரதமருக்கு இதற்கான பணம் எங்கிருந்து வந்தது என அக்கட்சி சார்பில் கேள்வியெழுப்பியுள்ளார் அரசியல் பீட முக்கியஸ்தர் வசந்த சமரசிங்க.
இதேவேளை, நலன் விரும்பியொருவர் இனாமாகவே இந்த விமான பயணத்தை ஏற்பாடு செய்து தந்ததாக பிரதமரின் புதல்வர் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment