கொழும்பை நோக்கி நகரும் எதிர்க்கட்சியின் பேரணி பல இடங்களில் பொலிசாரால் தடுக்கப்பட்டதையடுத்து சில இடங்களில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசுக்கு எதிராக கொழும்பில் எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களிலிருந்து தலை நகரை நோக்கி ஆதரவாளர்கள் நகர்ந்து வரும் நிலையில் பொலிசார் ஒன்று கூடலைத் தடுத்து வருகின்றனர்.
நீதிமன்றம் ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை தடுக்க மறுத்த போதிலும் பொலிசார் ஆங்காங்கு இடையூறு செய்து வருகின்ற நிலையில் இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றமையும் பிற்பகல் 2 மணியளவில் ஹைட் பார்க்கிலிருந்து ஆர்ப்பாட்ட நடவடிக்கை திட்டமிடப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment