ஆடை அணிந்து மக்கள் முன் செல்ல முடியாதுள்ளது: பெரமுன MP - sonakar.com

Post Top Ad

Monday, 8 November 2021

ஆடை அணிந்து மக்கள் முன் செல்ல முடியாதுள்ளது: பெரமுன MP

 


நாடு சென்று கொண்டிருக்கும் பாதை மக்களின் முழுமையான வெறுப்பை சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கின்ற கண்டி மாவட்ட பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ, ஆடை அணிந்து மக்கள் முன் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கிறார்.


வயல்வெளிகளில் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டிய விவசாயிகள் இன்று  வீதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்க்கட்சியினர் என்று ஆளுந்தரப்பு முத்திரை குத்துவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், அரசின் நிலைப்பாடுகளில் மாற்றமில்லையாயின் மக்கள் பக்கம் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment