அலகொன்றுக்கு 24 ரூபா செலவாகின்ற போதிலும் மக்கள் பாவனைக்கு 16 ரூபாவுக்கே மின்சாரம் வழங்கப்படுவதாகவும், சராசரியாக 8 ரூபா இழப்பை மின்சார சபை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கிறார் இலங்கை மின்சார சபைத் தலைவர் எம்.சி. பெர்டினான்டோ.
இந்நிலையில், யுகதனவி மின் உற்பத்தி திட்டம் நாட்டுக்கும் மக்களுக்கும் அவசியப்படுவதாகவும் இதனூடாக மக்களும் நாட்டின் பொருளாதாரமும் பயனடையும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
ஆயினும், குறித்த திட்டம் முறையற்ற வகையில் கையாளப்பட்டு அமெரிக்க நிறுவனமொன்றுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக விமல் கூட்டணி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment