தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் நிமித்தம் கடவுச்சீட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது குடிவரவு குடியகல்வு திணைக்களம்.
தினசரி 2500க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது ஒரே நாள் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேவைப்படும் ஆவணங்களுடன் வருவதன் ஊடாக துரிதமாக சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் திணைக்களப் பேச்சாளர் கயான் மிலிந்த தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment