தமது வீட்டுக்கு திருட்டு மின்சாரம் பெற்று வந்த குற்றச்சாட்டில் மகரகம நகரபிதா விராஜ் லக்ருவனின் தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம - கலவில பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டிலேயே நகரபிதாவும் வசித்து வருகின்ற அதேவேளை, இரவு வேளைகளில் தொடர்ச்சியாக மின் விளக்கு எரிந்து வருவதன் பின்னணியில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் விசாரித்ததில் திருட்டு மின்சாரம் பெறப்பட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் தொடர்வதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment