அரசாங்கத்தின் செயற்பாடுகளை சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கும் பொது சேவை ஊழியர்கள், சமல் ராஜபக்சவின் பொறுப்பிலுள்ள உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான விளக்கமும் உத்தரவும் அனைத்து பொது சேவைகள் திணைக்களங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளதாகவும் மீறியும் செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் தண்டனைகள் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசின் செயற்பாடுகளை பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகளும் சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதன் பின்னணியில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியே உள்நாட்டலுவல்களுக்கான கபினட் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment