மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த திருமதி மும்தாஸ் கொலை விவகாரத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கொலையான பெண்ணின் பணம் மற்றும் நகைகளுடன் தலைமறைவாக இருந்த நபர் இன்று வெல்லம்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விவகாரத்தின் பின்னணியில் கைதான மட்டக்குளி சித்தி ரொஷானாவின் சகோதரனே பிரதான சந்தேக நபர் என தெரிவிக்கப்படுவதோடு ஏலவே குறித்த பெண்ணும் கணவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment