அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேறு ஒரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கத் திட்டம் தீட்டியுள்ளதாலேயே உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச தற்போது பிரளயத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த.
பெரமுன - விமல் கூட்டணி மத்தியில் முறுகல் அதிகரித்துள்ள நிலையில் விமல் தரப்பின் அமைச்சுப் பதவிகளும் பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.'
இந்நிலையில், இவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என சனத் நிசாந்த தெரிவிப்பதோடு பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் தொடர்ச்சியாக விமல் கூட்டணியை பதவி விலக கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment