எனக்கு மட்டும் தான் பதவி தரவில்லை: கீதா குமுறல் - sonakar.com

Post Top Ad

Sunday, 21 November 2021

எனக்கு மட்டும் தான் பதவி தரவில்லை: கீதா குமுறல்



மஹிந்த ராஜபக்சவின் வீழ்ச்சியின் பின்னரும் அவரோடு துணை நின்றவர்களுள் தனக்கு மட்டுமே எந்தப் பதவியும் தரப்படவில்லையென தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார் கீதா குமாரசிங்க.


ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அங்கமாக இருந்ததில் தான் மட்டுமே மஹிந்தவோடு நிலைத்திருந்த பெண் உறுப்பினர் எனவும் இருந்தும் தனக்கு இன்னும் எதுவித பதவியும் தரப்படவில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அக்காலப்பகுதியில் இருந்த 53 பேரில் 52 பேருக்கு பதவி கிடைக்கப் பெற்றுள்ளதாக கீதா தெரிவித்துள்ளமையும், அரசியலமைப்பை மீறி அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசுக்கு எதிராக பொறியியலாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment