கட்சிப் பிணக்கை தீர்க்க தம்பியை சந்திக்கும் பிரதமர் - sonakar.com

Post Top Ad

Saturday, 6 November 2021

கட்சிப் பிணக்கை தீர்க்க தம்பியை சந்திக்கும் பிரதமர்

 


பெரமுனவுக்குள் எழுந்துள்ள உட்கட்சிப் பூசல் விரிவடைந்து வளர்ந்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் அவசரமாக கலந்துரையாட பிரதமர் முன் வந்துள்ளதாக பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.


விமல் - கம்மன்பில மற்றும் கூட்டணிக் கட்சிகள் அரசை பகிரங்கமாக விமர்சித்து வருகின்ற அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இரட்டை வேடம் போடுவதாக திலும் பகிரங்க குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளார்.


எனினும், இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்கிற நிலையிலேயே பொது மக்களிடம் பிரச்சினைகளை வெளியிட வேண்டியுள்ளதாக தயாசிறி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment