கொழும்பு, கபூர் கட்டிடத்தின் புனர் நிர்மாண பணிகளில் ஈடுபட்டிருந்த 34 வயது கடற்படை சிப்பாய் ஒருவர் கட்டிடத்திலிருந்து வீழ்ந்து மரணித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கந்தெகெட்டிய பகுதியைச் சேர்ந்த சிப்பாயே தவறி விழுந்ததாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மரணித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பழமை வாய்ந்த கபூர் கட்டிடம் தற்போது கடற்படையினரால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment