ஹெரோயின் 'பக்கற்றுகளுடன்' கான்ஸ்டபிள் கைது - sonakar.com

Post Top Ad

Saturday, 6 November 2021

ஹெரோயின் 'பக்கற்றுகளுடன்' கான்ஸ்டபிள் கைது

 


தனது காதலியுடன் இணைந்து ஹெரோயின் பக்கற்றுகள் தயாரித்துக் கொண்டிருந்த நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


நீண்ட காலமாக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தங்கல்ல பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பில் அங்கு குறித்த கான்ஸ்டபிளும் கைது செய்யப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


தனது காதலியின் செயற்பாடுகளில் அண்மைக்காலமாகவே கான்ஸ்டபிள் இணைந்து கொண்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment