வீடுகளுக்குள் எரிவாயு சிலின்டர் வைத்திருப்பது வெடிகுண்டை வைத்திருப்பது போன்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார் கின்ஸ் நெல்சன்.
அண்மையில் எரிவாயு சிலின்டர் வெடிப்பினால் பொலன்நறுவ மாவட்டத்தில் இறந்த 19 வயது யுவதி தனது தொகுதியைச் சேர்ந்தவர் எனவும் நீண்ட வரிசைகளில் காத்திருந்த சிலின்டர்களைப் பெற்றுச் சென்ற மக்கள் தற்போது அவற்றை வீட்டுக்குள் வைத்திருப்பதற்கு அச்சப்படுவதாகவும் நெல்சன் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்குள் மூன்றுக்கு மேற்பட்ட எரிவாயு சிலின்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment