இன்று நேற்று வாங்கிய கடனில்லை; கம்மன்பில - sonakar.com

Post Top Ad

Sunday, 21 November 2021

இன்று நேற்று வாங்கிய கடனில்லை; கம்மன்பில

 


நாட்டில் டொலர் மாத்திரமில்லை ரூபாயும் தட்டுப்பாடு என தெரிவிக்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில.


எனினும், இன்று நாடு எதிர்கொள்ளும் கடன் சூழ்நிலைக்கு 1955 இலிருந்து இன்று வரையான அனைத்து ஆட்சியாளர்களும் பொறுப்பு எனவும் அது எந்தக் கட்சி என்ற வேறுபாடு இல்லையெனவும் தெரிவிக்கிறார்.


தற்போது நிலவும் பொருளாதார நிலைமையை மூடி மறைப்பதில் அர்த்தமில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், அரசிடம் பணம் இல்லையென்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வது அவசியம் எனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment