பசில் ராஜபக்ச தனதில்லையென தொடர்ச்சியாக நிராகரித்து வரும் உரிமைக்காரர் இல்லாத மல்வானை வீட்டை அரசுடமையாக்க வேண்டும் என தெரிவிக்கிறார் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க.
இது போல, கடந்த ஆட்சியில் அலோசியசின் பர்பச்சுவல் நிறுவனம் மத்திய வங்கி பிணை முறி ஊழல் ஊடாக அடைந்த 8 பில்லியன் ரூபாவையும் திறைசேரிக்குப் பெற்றுக் கொள்ளப் போவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளமையையும் அவர் வரவேற்றுள்ளார்.
தற்சமயம், நாட்டில் வறுமை கூடியுள்ள போதிலும் ஆட்சியாளர்கள் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அநுர நாடாளுமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment