சப்புகஸ்கந்தையில் பயணப் பையொன்றினுள் வைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்த சடலம் மாளிகாவத்தையைச் சேர்ந்த 42 வயது பெண்ணுடையது என பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கை-கால் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பயணப் பையில் வைத்து குறித்த பகுதியிலுள்ள குப்பை கொட்டும் இடத்தில் கைவிடப்பட்டிருந்த சடலம் பொது மக்கள் முறைப்பாட்டையடுத்து நேற்றைய தினம் பொலிசாரால் மீட்கப்பட்டிருந்தது.
சடலம் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில் தற்பேதாது மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment