நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசின் வரவு - செலவுத் திட்டம் சோமாலியாவின் பட்ஜட் போன்று இருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, அதாள பாதாளத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்ற அவர், கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு மேலும் பேரிடியாக இந்த பட்ஜட் அமைந்துள்ளது என்கிறார்.
1628 பில்லியன் ரூபா பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான, காத்திரமான திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment