யுகதனவி திட்டத்தில் அமெரிக்க நிறுவனத்தின் தலையீட்டை எதிர்தது உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தமக்கான பிரத்யேக சட்டத்தரணிகளை நியமித்து அரசுக்கு எதிராக வாதாடப் போவதாக தெரிவிக்கிறது விமல் - வாசு - கம்மன்பில கூட்டணி.
பெரமுனவில் பசில் மற்றும் வியத்மக அணியுடன் முறுகல் அதிகரித்துள்ள நிலையில் இவ்வழக்கில் சட்டமா அதிபரை எதிர்த்து அமைச்சர்களே வழக்காடப் போகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவையில் வாசித்து முடிப்பதற்கு முன்பாகவே பத்திரங்கள் நிறைவேற்றப்படுவதாக விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment