கோதுமை தட்டுப்பாடு; பாண் விலை உயர்வு - sonakar.com

Post Top Ad

Sunday, 28 November 2021

கோதுமை தட்டுப்பாடு; பாண் விலை உயர்வு

 



நாட்டின் பல பாகங்களில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கோதுமையின் சந்தை விலை உயர்ந்திருப்பதாகவும் இதன் நிமித்தம் பாண் உட்பட பேக்கரி தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அண்மைக்காலமாக 'தட்டுப்பாடு' நிலவும் பொருட்களுக்கு விலை அதிகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment