எரிபொருள் விலை 'சூத்திரம்' கேட்கும் கம்மன்பில! - sonakar.com

Post Top Ad

Saturday, 27 November 2021

எரிபொருள் விலை 'சூத்திரம்' கேட்கும் கம்மன்பில!

 



எரிபொருள் விலைகைளை நிர்ணயிப்பதற்கான சூத்திரம் ஒன்றின் அவசியமிருப்பதாக தெரிவிக்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில.


கடந்த ஆட்சியில் மங்கள சமரவீர இதனை அறிமுகப்படுத்திய போது அதனை கடுமையாக விமர்சித்திருந்த கம்மன்பில இப்போது அதற்கான தேவையிருப்பதாக விளக்கமளிக்கிறார். அத்துடன் எரிபொருள் விலைத் தளம்பலை சமப்படுத்தும் வகையிலான பிரத்யேக நிதியம் ஒன்றும் அவசியம் என அவர் தெரிவிக்கிறார்.


அமைச்சரவையில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment