ஒரே நாடு - ஒரே சட்டம் விசேட செயலணியின் தலைவராக ஞானசார நியமிக்கப்பட்ட விவகாரம் தனக்கும் அதிருப்தியளிக்கிறது என்று நீதியமைச்சர் தெரிவித்திருந்த கருத்து அவருக்கு அமைச்சு மட்டத்திலான அழுத்தங்களை உருவாக்கியுள்ளதாக அறியமுடிகிறது.
இந்நிலையில், அவர் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அரசு சார்பு சிங்கள ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வருகின்றன. முஸ்லிம்களுடனான சந்திப்பொன்றில் வைத்து தன்னால் தொடர்ந்து இப்பதவியில் நீடிக்க முடியாதுள்ளது என நீதியமைச்சர் தெரிவித்ததாக கூறப்படும் கருத்தை மையமாகக் கொண்டு இவ்வாறு தகவல் வெளியிடப்பட்டு வருகிறது.
பல அமைச்சர்கள் தாம் கையாலாகாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக குமுறல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment