கண்டி, தலதா மாளிகையருகே ட்ரோன் பறக்க விட்டு தலதா மாளிகையை படம் பிடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பங்களதேஷி பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயர் பாதுகாப்பு பிரதேசமான தலதா மாளிகையை படம் பிடிப்பதற்கான அனுமதியில்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரின் கடவுச்சீட்டு, கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தனது யுடியுப் சனலுக்காக காணொளி பதிவு செய்ததாக விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment