அன்னியர் ஆட்சியிலிருந்து விடுபட்ட பின்னர் இலங்கை நாடாளுமன்றில் நிதியமைச்சர்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்துள்ள சாதனையை தமதாக்கிக் கொண்டுள்ளது ராஜபக்ச குடும்பம்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவைத் தொடர்ந்து பசில் ராஜபக்ச சுதந்திர இலங்கையின் நாடாளுமன்றில் இன்று வரவு - செலவுத் திட்டத்தை தாக்கல் செய்ததன் ஊடாக இந்த 'சகோதர' வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா சூழ்நிலையில் இலங்கையின் வருமானம் தொடர்பில் செப்டம்பர் மாதம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வெளியிட்ட தகவல்கள்கள் பல பொய்யானவை என 'உண்மையறிந்து' வெளியிடும் பொது சேவை நிறுவனமான factcheck இன்று அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment