கடந்த செப்டம்பர் 8ம் திகதியிலிருந்து காணாமல் போனதாக கருதப்பட்டு தேடப்பட்டு வந்த பொலிஸ் அதிகாரியொருவரது உடலம் கம்பளை வைத்தியசாலையின் நீர்த் தாங்கியிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அனுமதிக்கப்பட்ட அதே தினம் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விசாரணைகள் தொடர்ந்த நிலையில், வைத்தியசாலை நீர்த்தாங்கியிலிருந்து வெளியேறிய துர்நாற்றத்தின் பின்னணியில் அங்கு தேடப்பட்டு, குறித்த நபரின் உடல் இரு தினங்களுக்கு முன்பாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment