பொருளாதார திருப்பு முனை 'மாய மான்' : ரணில்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 16 November 2021

பொருளாதார திருப்பு முனை 'மாய மான்' : ரணில்!

  


நாட்டின் பொருளதாரம் திடீரென  தலைகீழாக மாறி வளர்ச்சி பெறும் எனும் மாயமானை நம்ப வைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக சாடியுள்ளார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


ஜப்பான், சீனா உட்பட ஐரோப்பிய நாடுகளும் உற்பத்தி மற்று விநியோகத்தில் பலத்த சவால்களை எதிர் கொண்டு வரும் நிலையில் முழுமையாக இறக்குமதியில் தங்கியிருக்கும் நாடு என்ற வகையிலும் வருடாந்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமாக கடன் செலுத்த வேண்டிய சூழ்நிலையிலும், அரசாங்கமே உருவாக்கிக் கொண்டுள்ள உள்நாட்டு பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியிலும் திடீர் திருப்பு முனைக்கு எதுவித சாத்தியமுமில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.


உள்நாட்டு வங்கிகளும் தமது கடன் சேவைகளூடான போதிய வருவாய் இல்லாத நிலையிலேயே தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கின்ற அவர், அந்நியச் செலாவணி வீழ்ச்சி மற்றும் சர்வதேச ரீதியாக இலங்கை உருவாக்கிக் கொண்டுள்ள சிக்கல்கள் விரைவாகத் தீர்க்கக் கூடிய விடயங்களில்லையென சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment