வரவு - செலவுத் திட்டத்தின் பின்னரான சம்பிரதாயபூர்வ நாடாளுமன்ற தேநீர் வைபவத்தில் கலந்து கொண்ட போது மஹிந்த ராஜபக்சவை தான் சந்தித்து உரையாடிய வேளையில் எடுக்கப்பட்ட படம் ஒன்று குறித்து விளக்கமளித்துள்ளார் ஹர்ஷ டி சில்வா.
தான் சற்று குனிந்து நின்று பேசுவது தொடர்பில் விமர்சிக்கப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்சவுக்கு தலை குனிந்ததாக விசனம் வெளியிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தான் அவ்வாறு தாழ்ந்து பேசியதன் காரணம் எழுந்து நிற்க முடியாமல் அமர்ந்திருக்கும் ஒருவரை கௌரவப்படுத்தவே என விளக்கமளித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச உடல் ரீதியாக பலவீனமடைந்து வருவதாக பெரமுனவினர் ஏற்க மறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment