ஒரே 'சட்டம்' நீதிமன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்: சுசில் - sonakar.com

Post Top Ad

Sunday, 14 November 2021

ஒரே 'சட்டம்' நீதிமன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்: சுசில்

 


ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற விடயத்தை நீதிமன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.


பிரித்தானியர்களினால் உருவாக்கப்பட்ட சட்டம், அதன் அடிப்படையிலான அரசியல் சட்டத்தில் இயங்கி வரும் நாட்டில் நவீன சட்டத்தைக் கொண்டு வருவதில் தவறில்லை. ஆனால், அந்த சட்டம் அனைத்து மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். அதனை நீதிமன்றிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என அவர் விளக்கமளித்துள்ளார்.


தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட சிலருக்கு மாத்திரம் மன்னிப்பு கிடைப்பது எல்லோருக்கும் சமநீதி கிடைப்பதில்லையென்பதற்கு நல்ல உதாரணம் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment