2012ம் ஆண்டு முதல் இலங்கையில் இன வாதமூடான பயங்கரவாதத்தை விதைப்பதில் பெரும் பங்காற்றிய ஞானசார தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரே நாடு - ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி பொது மக்களின் அபிப்பிராயம் அறிவதற்கான செயற்பாடை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த செயலணிக்கு தமது அபிப்பிராயத்தை தெரியப்படுத்த விரும்பும் அமைப்புகள், தனி நபர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அல்லது கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.
Secretary, Presidential Task Force on ‘One Country, One Law’, P.O. Box 504, Colombo
குறித்த குழுவில் தமிழ் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இல்லையென்ற குற்றச்சாட்டை நிவர்த்தி செய்ய, இரு புத்திஜீவிகள் இராஜினாமா செய்து தமிழ் சமூகத்தைச் சேர்ந்த மூவர் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment