அமெரிக்க இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதலை திட்டமிட்ட சூத்திரதாரிக்கு எதிராக 20 வருடங்களுக்குப் பின்னரே அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை எத்தனை வருடங்களானாலும் தண்டிக்காமல் விட மாட்டோம் என்கிகாறர் அமைச்சர் சரத் வீரசேகர.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் நியாயமாக நடக்கவில்லையென அவ்வப்போது கார்டினல் தெரிவித்து வருவதில் தமக்கு ஆட்சேபனையில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், இதுவரை 32 பேருக்கு எதிராக ஐந்து மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
தொடர்ச்சியாக நௌபர் (மௌலவி) என அறியப்படும் நபரே சூத்திரதாரியென சரத் வீரசேகர தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment