இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சினேகபூர்வமான கிரிக்கட் விளையாட்டுப் போட்டியொன்றை நடாத்துவதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இராணுவ நிகழ்வொன்றில் தான் இடது கை ஆட்டக்காரர் என்பதை வெளிக்காட்டியிருந்த ஜனாதிபதியும் இதில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் இது தேதி குறிக்கப்படாத உத்தேச திட்டம் எனவும் மாலைதீவு விளையாட்டுத்துறை அமைச்சரிடமிருந்தே இதற்கான வேண்டுகோள் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment