$8 மில்லியன் உடனடியாக கேட்கும் சீன நிறுவனம் - sonakar.com

Post Top Ad

Monday, 8 November 2021

$8 மில்லியன் உடனடியாக கேட்கும் சீன நிறுவனம்

 


இலங்கைக்கு பசளை அனுப்பியதனால் ஏற்பட்ட இழப்புகளை நிவர்த்தி செய்ய மூன்று தினங்களுக்குள் எட்டு மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சீன நிறுவனம்.


குறித்த நிறுவனம் அனுப்பிய பசளைத் தொகுதியில் ஆபத்தான மூலக்கூறுகள் இருப்பது இரு தடவைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆதலால் அவற்றை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் இலங்கை தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.


ஏலவே சீன தூதரகம் இலங்கை மக்கள் வங்கியை 'தடை' செய்துள்ள அதேவேளை இதற்கான கட்டணத்தைக் கொடுத்தாக வேண்டும் என கபரால் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment