இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 13,995 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 23 பேர் இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 697 புதிய தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தொற்றாளர் அதிகரிப்பு குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
ஆயினும், இலங்கையில் மாத்திரமன்றி அபிவிருத்தியடைந்த நாடுகளாக ஐக்கிய இராச்சியம், அமெரிக்காவிலும் இதே நிலை தான் என கொரோனா அதிகரிப்புக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment