2029 வரை பொருளாதாரம் தலை தூக்குவது கடினம்: பந்துல - sonakar.com

Post Top Ad

Thursday, 4 November 2021

2029 வரை பொருளாதாரம் தலை தூக்குவது கடினம்: பந்துல

 


இலங்கையின் கடன் பெறும் தகுதி குறைக்கப்பட்டுள்ளதுடன் வங்குரோத்து நிலையை அண்மித்துள்ள சூழ்நிலையில் 2029 க்குள் தகுந்த வழியொன்றைக் காணாது விடின் நாட்டின் பொருளாதாரம் தலை நிமிர முடியாது என தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன.


தற்சமயம் உள்ள சூழ்நிலையில் இந்த தசாப்தத்துக்குள் மீண்டும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது மிகக் கடினமான செயல் எனவும் விளக்கமளித்துள்ள அவர், மாற்று வழியொன்றைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


எனினும், பசில் ராஜபக்ச நிதியமைச்சராகியுள்ளதாக் 2022ல் பொருளாதாரம் மறு மலர்ச்சி பெற்று விடும் என்று பெரமுனவினர் தொடர்ந்தும் பிரச்சாரம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment