இலங்கையில் இன்று (11) கொரோனா தொற்றின் பின்னணியில் 19 மரணங்களுடன் 527 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தினசரி மரண எண்ணிக்கை தொடர்ச்சியாக 15ஐ தாண்டி வெளியிடப்படுகின்ற அதேவேளை 500க்கு மேற்பட்ட தொற்றாளர்களும் பதிவாகி வருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகள் தேவையெனவும் சுகாதார அதிகாரிகள் தரப்பிலிருந்து குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment