சமகி ஜன பல வேகய கட்சியிலிருந்து டயானா கமகே வெளியேற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்து வரும் நிலையில், அந்தக் கட்சியும் தொலைபேசி சின்னமும் தன்னுடையது எனவும் தன்னை யாரும் வெளியேற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார் டயானா கமகே.
தன்னுடைய கட்சியை அபகரித்து விட்டு தன்னை வெளியேற்ற அனுமதிக்கப் போவதில்லையென தெரிவிக்கும் அவர், குறித்த கட்சிக்குள் இருக்கும் பிளவுகள் பிரச்சினைகள் மற்றும் இரகசியங்களைத் தான் வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார்.
எனினும், செயற்குழு முடிவின் ஊடாக அவர் வெளியேற்றப்பட்டு விட்டதாக சமகி ஜன பல வேகய தெரிவிக்கின்றமையும் டயானா ஏலவே ஆளுங்கட்சி உறுப்பினராக செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment