முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசியல் கைதியாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சமகி ஜன பல வேகய, அவரை விடுவிப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கிறது.
ரஞ்சனுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இதுவரை அது சாத்தியமற்றுப் போயுள்ளது. இதேவேளை, மரண தண்டனைக் கைதி துமிந்த சில்வா அண்மையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டு அரசாங்க உயர் பதவியொன்றையும் பெற்றுள்ளார்.
இச்சூழ்நிலையில், ரஞ்சன் விவகாரத்தை பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்தில் மனித உரிமைகள் அமைப்பினரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல கட்சி மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment