கப்பம் கேட்டு பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டதன் பின்னணியில் வந்துரம்ப பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவுக்கான பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகொட பொலிசார் இக்கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.
குறித்த நபருக்கு எதிராக இவ்வாறான முறைப்பாடுகள் இருந்து வந்ததன் பின்னணியில் இக்கைது இடம்பெற்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment