நடைமுறை அரசின் அமைச்சர்களோடு முறுகலின் பின்னணியில் முக்கிய பதவிகளை வகித்து வந்த புத்தி ஜீவிகள் இராஜினாமா செய்வது தொடர்ந்து வருகிறது.
இப்பின்னணியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பிரதானியாக பதவி வகித்து வந்த பேராசிரியர் முதித விதானபதிரனவும் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிசந்தவுடனான முறுகலின் பின்னணியிலேயே இப்பதவி விலகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சுகாதார அமைச்சருடனான முறுகலின் பின்னணியில் முக்கிய நபர்கள் தமது பதவிகளை துறந்துள்ளமையும் தற்போது ஜனாதிபதி தலையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment