நான்கு முக்கிய அம்சங்கள் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து பொறுப்பான பதில் கிடைக்காவிட்டால் நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தப் போராட்டம் நடாத்தப்போவதாக தெரிவிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.
இடமாற்றம், நியமனங்கள் போன்ற விடயங்களில் அரசிடமிருந்து தெளிவான நிலைப்பாடு அவசியம் எனவும் இதனை வலியுறுத்தி சுகாதார அமைச்சரிடம் கடிதம் கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கும் குறித்த சங்கம், சாதகமான பதில் இல்லையேல் போராட்டம் நடாத்தப் போவதாகவும் அதற்கான முடிவை 7ம் திகதி ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
கடந்த ஆட்சியில் நாட்டு முடக்கும் பல போராட்டங்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமே நடாத்தி அரசுக்கு பாரிய நெருக்கடியை உருவாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment