விவாசயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வருவது குறித்து சமகி ஜன பல வேகய ஆலோசித்து வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் பாரிய கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வரும் அதேவேளை, தமது உச்ச கட்ட வெறுப்பை வெளிக்காட்டும் விதமாக மஹிந்தானந்தவின் உருவ பொம்மையையும் அண்மையில் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும், கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையும் அண்மையில் தோற்கடிக்கப்பட்டிருந்தமையும் முஸ்லிம் எம்.பிக்களின் உதவியோடு தொடர்ந்தும் நாடாளுமன்ற பெரும்பான்மையை ஆளுங்கட்சி பேணி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment