கட்டார் மத்திய வங்கியுடன் 'உறவை' வளர்க்க சந்திப்பு - sonakar.com

Post Top Ad

Friday, 22 October 2021

கட்டார் மத்திய வங்கியுடன் 'உறவை' வளர்க்க சந்திப்பு

 


கட்டார் மத்திய வங்கியுடனான உறவையும் பொருளாதார தொடர்புகளையும் வலுப்படுத்தும் பின்னணியில் இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாத் கபரால் கட்டார் மத்திய வங்கி ஆளுனரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.


இரு நாட்டு மத்திய வங்கிகளுக்கிடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.


கொரோனா சூழ்நிலையில் இரு நாட்டு 'பொருளாதார' உறவுகளுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment