சீனா - இலங்கை உறவில் விரிசல்; மக்கள் வங்கிக்கு தடை! - sonakar.com

Post Top Ad

Friday, 29 October 2021

சீனா - இலங்கை உறவில் விரிசல்; மக்கள் வங்கிக்கு தடை!

 


இரசாயன உர விவகாரத்தில் சீனா - இலங்கையிடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் சீன நிறுவனத்துக்கான கட்டணத்தை நிறுத்தி வைத்த இலங்கை வங்கியை சீன தூதரகம் தடை செய்துள்ளது.


இலங்கை மக்கள் வங்கியின் நடவடிக்கைகளால் சீன தொழில் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதாக தெரிவித்து, இப்பின்னணியில் சீன தூதரகத்தின் வர்த்தக பிரிவு இத்தடையை அறிவித்துள்ளது.


எனினும், நீதிமன்ற உத்தரவின் பின்னணியிலேயே கட்டணங்கள் இடை நிறுத்தப்பட்டதாக மக்கள் வங்கி விளக்கமளித்துள்ளமையும் இறக்குமதி செய்யப்பட்ட உரத்தை திருப்பிக் கொடுப்பது தொடர்பில் அரசுக்குள் இழுபறி நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment