11 இளைஞர்கள் கடத்தப்பட்டமையின் பின்னணியில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார் சட்டமா அதிபர்.
2008 - 2009 காலப்பகுதியில் இடம்பெற்ற ஆட்கடத்தல்களின் பின்னணியில் வசந்த உட்பட 13 பேருக்கு எதிராக கடந்த ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
எனினும், நடைமுறை அரசில் இதற்கு முன்னரும் கைவிடப்பட்ட பல வழக்குகளின் தொடர்ச்சியில் இவ்வழக்கிலிருந்தும் குற்றச்சாட்டுகள் மீளப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment